ஞாயிறு, 22 அக்டோபர், 2017

23=7-2017== நதியோர நாணல்கள்--கவி வடிவில் காதல்கடிதம்

கவிப் பதில்கடிதம்
கண்ணா என் காதல் 
மன்னா உன் 
மனஉணர்ச்சிகள்
கடிதத்தில் மிதந்து வர
பாவை நானும்
படித்து பரவசமானேன்
உள்ளுக்குள்ளேயே
காதலை வைத்து
ஊமையாய் தவித்திருந்தேன்
உன் மடல்
உன் நிலையைச்சொல்ல
என்மன காதலுக்கு
அது எளிதானது
உன் உள்ளமெனும்
காட்டாறு ஓடிவரும்
வேகம் பார்த்தேன்
காதல் ராகம் பாடியே
கன்னி என்மனதை
எழுப்பிவிட்டாய்
உண்மைதானே
கண்ணா இந்தக்கடிதம்?
இல்லை எந்தக் குழுமத்திற்காகவாவது
காதல் கடித போட்டிக்கு
எழுதியதை தவறுதலாக
உன் முகவரிக்கு எழுதிவிட்டேன்
என்று சொல்லி
என்னை அழவைக்காதே
என் உள்ளம் உடைந்து விடும்
கண்ணனின் லீலை
இல்லையே இது ஏனெனில்
வேடிக்கை உனக்கு வாடிக்கையாயிற்றே
வேடிக்கைக் காட்டி
வேதனை தராதே
வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சாதே
முன்னுரைத்த காதலையே முடிவுரையாய்த் தந்துவிடு
இனி உனக்கும் எனக்கும்
தனித்தனி வாழ்க்கை இல்லை
உன் பதில் நேரில் வருவதாக இருக்கட்டும்!
சரஸ்வதி ராசேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக