ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--20=8-17-கனவாகிப்போனாயே வாழ்வில் வரமாகி வந்தவளே

கனவாகிப்போனாயே
வாழ்வில் வரமாக வந்தவளே
தென் பொதிகை தென்றலாய்
தேனினிமையாகி வந்து
உள்ளமெல்லாம் உவப்பளிக்க
உலா வந்த உன்னத நிலவே
கொஞ்சும் கொலுசொலிக்க
கோவில் சிலையாக வந்தவளே
நொடியான உன் பார்வையில்
நோயுற்றுப்போனேன் நான்
பூங்காவில் உரையாடி
பொழுதெல்லாம் விளையாடி
வழியெல்லாம் கவிபாடி
வாழ்வில் வரமாக வந்தவளென மகிழ்ந்தேன்
உன்னையே நேசித்தேன்
உன்னால சுவாசித்தேன்
என்னாசையை நிராசையாக்கி
என்னைவிட்டுப்போனதேன்
உண்ணாமல் உனை நினைத்து
உருகி மனம் நோகிறேன்
உறங்காமல் அவதியுற்று
உன்மத்தம் ஆகிறேன்
அனைத்தும் கைகூடி
ஆனந்தம் பெரும் வேளையிலே
கனவாகிப்போனாயே
நினைவினில் என்னை நிலை தடுமாற வைத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக