ஞாயிறு, 22 அக்டோபர், 2017

நதியோர நாணல்கள் 1=10-17-பாசத்தின் விளைனிலங்கள்

சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட #பாசத்தின்_விளைநிலங்கள் எனும் தலைப்பில் இடம் பெற்ற சிறப்பு கவிதைப் போட்டியில் பங்கு கொண்டு #பாசத்தின்_துளிர்கள் எனும் சிறப்புச் சான்றதழைப் பெறும் கவிஞர்கள் விபரமும் சான்றதழ்களும்.
பாசத்தின் விளை நிலங்கள்
கோடி கோடியாய் குவித்தாலும்
குதூகலம் கிடைக்காது குழந்தைகள்
இல்லாத வீட்டில்
கூடுகின்ற சுற்றங்கள் இருந்தாலும்
கொஞ்சிக்குலவ குழந்தையில்லா வீடு
வெற்றுக் கூடு
பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
போற்றும் கல்வியைத் தராவிட்டால் ஏது சீரு ?
ஆன்றோர் போற்ற அறிவைத் தந்து
சான்றோனாக்குவதே பெற்றோர் கடமை
சிறு வயதிலேயே சிந்திக்க கற்றுத்தரவேண்டும்
செயல் முறை கல்வியைத்தரவேண்டும்
இன்றைய பிள்ளைகள் நாளைய குடிமக்கள்
ஈன்றவர்கள் அதை மனதில் நிறுத்தி
நற்செயல் உள்ளவனாக ஆக்கவே
நாள்தோறும் கவனம் கொள்ளவேண்டும்
பெற்று வளர்த்து பெயரும் இட்டு மகன்
பெருமையடைய நாளும் உழைத்தவர்களுக்கு
கல்வி கேள்விகளில் சிறந்தவனாய் ஆகி
கைம்மாறாய் முதியோர் இல்லத்தில் விடாதுஇருக்கவேண்டும்
பாசத்தின் விளை நிலங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக