ஞாயிறு, 22 அக்டோபர், 2017

10-9-17சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா - உறங்காத விழிகள்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய .10/09/2017 அன்று நடந்து முடிந்த காதல்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் Ragavan Sivatharsini
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
உறங்காத விழிகள்
காதல் கவிதை சான்றிதழ்--8
வார்த்தையை விட விழிகள் வலியது நீ
பார்த்த ஒரு பார்வையில் நான்
பாதை மாறிப்போனேன் நெஞ்சம்
பழுதடைந்து போனேன்
உன் விழிமலர் கண்டது முதல்
உன்னை மனதுக்குள் வரைந்து விட்டேன்
நெஞ்சில் விழிவேலால் கூர் பாய்ச்சிவிட்டு
வஞ்சி என்னை வதைக்கிறாய்
மிஞ்சி என்னை சிதைக்கிறாய்
கெஞ்சினாலும் கருணை காட்ட மறுக்கிறாய்
விழிஅம்பை எய்து விட்டு
வழிகாட்டாமல் வம்பு செய்கிறாய்
நீ இல்லாத நெஞ்சம் வெறும் கூடு
பூவே நீ சம்மதித்தால் என் வாழ்வு தேன் கூடு
கன்னி நீ சம்மதித்தால் திருமணம் கைகூடும்
கனவாய்ப் போனால் என் மனம் வாடும்
கரு விழியால் உன்னை என்னுள் நுழைத்துவிட்டுமெய்
உருகவைப்பதென்ன நியாயமோ சொல் பெண்ணே
உறங்காத விழிகளுடன் உன்மத்தம் பிடித்து
கிறங்கிபோய் கிடக்கிறேன் உன் நினைவில்
அன்புக்கு அடிபணிபவன் நான்என்னை அநியாயமாக
வன்முறையாளன் ஆக்கி விடாதே
வந்துவிடு தந்துவிடு உன்மனதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக