புதன், 28 ஜூன், 2017

தமிழமுது கவிச்சாரல் குழுமம்--23-6-2017- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
****
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 23/.6/17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழை
வெற்றிச் சான்றிதழ் பெறும் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துகள்
#
தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

தமிழ்ப்பட்டறை கதைப்போட்டி

சிறந்த எழுத்தாளராக
வெற்றிபெற்ற Krishna Thilaga அவர்களுக்கும்
மற்றும் முத்திரை எழுத்தாளராக வெற்றிபெற்ற
Saraswathi Rajendran அவர்களுக்கும்
நல்வாழ்த்துகள்

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா -------------11/06/2017-----------காதல் கவிதை

Image may contain: 3 people


வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 11/06/2017நடந்து முடிந்த ககாதல் விதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் ஆ.விஜயலெட்சுமி
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
உன்னைக்காணாத கண்ணும்
உன்னைக் கண்ட நாள் முதலா
என் தூக்கம் போனது
உன் நினைவு கொல்வதனால்
என் மனமும் சாகுது
கண்ணுக்குள்ளே காந்தம் வச்சு
என்னை நீ ஈர்த்திட்டே
உன்னோடு ஒட்டிவிட்ட மனசை
என்னாலும் பிரிக்க முடியலே
ஒத்தையிலே அலையுறேன்
நித்தமும் வேகிறேன்
உன்னையே நினைச்சு மனம்
உன்மத்தம் ஆகிறேன்
வண்ணக்கிளியே சீக்கிரம் வாராயோ
எண்ணத்தை புரிஞ்சு வாட்டம் தீராயோ
உன் நினைவில் உறக்கமின்றி
உயிர் உருகி நிற்கிறேன்
சோகம் சொல்லிவிட்டேன் விரிவாக
சுகம் நல்க நீ வருவாயா
காலமெல்லாம் காத்திருப்பேன்
கன்னி உன்னைச் சேரவே
உன்னைக் காணாத கண்ணும் வீணே
உன்னை எண்ணாத நெஞ்சும் பாழே
சரஸ்வதிராசேந்திரன்

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா --- 8/6/17


Image may contain: 2 people

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே. 
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 8/06/2017நடந்து முடிந்தபடம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் கவிஞர் மருதூர் மெளஜுன்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில் 
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
முகமலரை நீரில் அமிழ்ந்து
மூழ்கி எழுகையில் சிந்தும்
நீர் முத்துக்கள் சிந்து பாட என்
நெஞ்சத்தில் தும்பி பறக்குதடி
கோடையின் வறட்சி நீங்க குளத்து
குளிர்ந்த நீரில் முகம் கழுவல் இயல்புதான்
முகத்தாமரையில் முத்தமிட்டுச் சென்றதோ மீன்கள்
முகம் சிவந்து போகிறதே நாணத்தால்
எண்ணம் ஈர்க்கும் எழில் வடிவே
என்னை ஆட்கொண்ட பேரழகே
ஈர்ப்பினில் ஏற்படும் உன் அழகு
வார்ப்போனின் வலிமை சொல்கிறது
வந்து விடு உன்னைத் தந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்

31-5-17 தமிழமுது கவிச்சாரல்-பூக்களெ சற்று ஓய்வெடுங்கள் அவள் வருகிறாள்

னியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
****
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 31--5--17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_பூக்களே_சற்று_ஓய்வெடுங்கள்_அவள்_வருகிறாள்
வெற்றிச் சான்றிதழ் பெறும் #கவிஞர்_சரஸ்வதி_ராசேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
#நிர்வாகி_கவிஞர்_கவிச்சிகரம்_முகன் நடுவராக தலைமையேற்று சிறப்பான கவிதைகளை தேர்வு செய்தமைக்கு அவருக்கு நன்றிகளும் வாழ்த்தும்

##பூக்களே_சற்று_ஓய்வெடுங்கள்_அவள்_வருகிறாள்

தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வருகிறாள்
பூக்களுக்கு இன்று விடுமுறை
பூவையவள் வருகின்றாள்
பொன்னழகு மேனியவள்
பூவிதழின் மென்மையவள்
நெஞ்சம் எனும் ஊஞ்சலிலே
கொஞ்சி வரும் தேனருவி
திசைகள் எல்லாம் தடுமாறும்
தேவதை அவள் வருகையிலே
பருவமலர் பூத்த அழகில்
அருவியெல்லாம் ஆர்ப்பரிக்கும்
தென்றல் கூட நிறுத்தி வீசும்
தென்னம் பாளை சிரித்து அழைக்கும்
கவிஞர் படைத்த இலக்கியமோ
கலைமங்கை சீதனமோ
கொஞ்சும் மலர் இதழ் விரிக்கும்
கிறுகிறுக்க வைக்கும் அழகில்
வண்ணமலர் கண்டு மனம் மகிழும்
எண்ணமெல்லாம் அவள் வரவால் துள்ளும்
பூவோடு காற்றும் சேர்ந்து அசைந்தாடுது
பூவை மனமும் அதைக் கண்டு பூபாளம் பாடுது
பூவுக்குள் தேன் வந்து சேர்ந்தது
பூமேனி பன்னீர் பூவாய் தூவுது
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வருகிறாள்
சரஸ்வதிராசேந்திரன்

5-6-2017==ஊஅ...ல...ழ..ள நட்சத்திர கவிதைப்போட்டி=கற்க கசடற

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
05-06-2917 அன்று நடைபெற்ற" நட்சத்திக்கவிதைகள் போட்டி" முடிவுகள்...
-----------------------------------------------------------
தலைப்பு:;" கற்க கசடற"
நடுவர்:நமதுதளத்தின் தலைமைநிர்வாகி "அன்புச்சகோதரி கவிஞர் "Sara Bass" அவர்கள்...
-----------------------------------------------------------
இவண் :ஊ...ல...ழ...ள நிர்வாகிகள் குழுமம்/

ஊ.ல..ழ..ள நடப்புச்செய்திகள் கவிதைப்போட்டி==20-5-2017

,,"நடப்புச்செய்திகள் கவிதைப்போட்டி"முடிவுகள்...
(தேதி: 09-05-2017 முதல் 20-05-2017 வரை)
.
ஊ...ல...ழ...ள....நிர்வாகிகள் மற்றும் உங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்ககொள்கிறோம்
நடப்புச் செய்திகள் கவிதைப்போட்டி
துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய காதலி==தினமலர் செய்தி
அன்பும் அறமும் உடைத்ததே இல்வாழ்க்கை
அதைவிடுத்து கண்டதே காட்சி
கொண்டதே கோலம் என்பதேஇன்றைய சாட்சி
காலையில் மாலையில் கடற்கரை சினிமா
சாலையில் சந்து பொந்துகளில் சந்திப்பு
வேலை நேரம் போக ஒன்றாக ஊர் சுற்றல்
அகிலம் முழுவதும் சுற்றி அலுத்துப்போக
அடுத்த நாளிலிருந்து அவளை விடுத்து
அடுத்த மலர் தாவும் மனமும் கொண்டு
பெற்றவர்கள் மனம் கோணாமலிருக்கஅவர்கள்
பார்த்த பெண்ணை மணமுடிக்க விழைய
கோடையிடி கேட்ட நாகம் போல் நெஞ்சு குமுறினாள்
ஆடைகட்டி அலங்காரத்துடன் மகிழ்ச்சியில்
மலர்மாலை அணிந்து மகிழ்ச்சியுடன்மணமகன்
மணமேடையில் அமர்ந்த மகிழ்வான தருணம்
பட பட வென உள்ளே வந்த முன்னாள் காதலி
சட்டென்று கைத்துப்பாக்கியைக்காட்டி
மணமகனை தன் முன்னாள் காதலனை
மற்றவர்கள் திகைத்து நிற்க கடத்திச் சென்றாள்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
சித்தம் தெளிந்து சத்தியம் தோய்ந்திடின்
பித்தம் தெளிந்துவிடும் உன்மத்தம் போகும்

தமிழமுது கவிச்சாரல்=படக்கவிதை


15-5-2017--தமிழமுது கவிச்சாரல் ==முள்ளுக்காட்டில் முளைத்த தாயே

இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
****
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 15--5--17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு #
வெற்றிச் சான்றிதழ் பெறும் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
#கவிதாயினி_கவி_இமயம்_உஷா_ராணி நடுவராக தலைமையேற்று சிறப்பான கவிதைகளை தேர்வு செய்தமைக்கு அவருக்கு நன்றிகளும் வாழ்த்தும்

#சாமி_நுறு_சாமி_இருக்கிறது_ஆனால்
#_தாயி_இரண்டு_தாயி_இருக்கிறாளா_முடிக்கவும் ...

தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

கவியருவி குழுமம்-21-5-2017-படம் பார்த்து ஒரு நிமிடக்கதை

இலட்சிய கரங்கள்
சிவகாமி குழந்தையை குளிப்பாட்டிக்கொண்டிருக்கும்போது
அவள் புருஷன் முத்துவோட நண்பன் கதிர் போதையுடன் வந்தான்
இவன் எதுக்கு இங்கே வரான் படுபாவி இவந்தானே என் புருஷனை
குடிக்க வச்சு கெடுத்ததே இப்ப இங்கே எதுக்கு வந்திருக்கான் யோசித்தபடியே குழந்தையை குளிப்பாட்டுவதில் கவனம்செலுத்தினாள்
‘’என்ன சிவகாமி வந்தவ்னை வான்னு கூட சொல்லமாட்டியா ?என்ன
இருந்தாலும் நான் உன் புருஷனோட தோஸ்து இல்லையா ?’’
‘பதில் ஏதும் கூறாமல் அவள் காரியத்திலேயே கவனமாய் இருந்தாள்
‘’இதோ பார் இந்த லோகத்திலே மூணு பொட்டை புள்ளைகளை வச்சுகிட்டு
நீ என்ன செய்வே ?அதனால நான் ஒரு ஐடியா சொல்றேன் கேட்டின்னா
நீயும் உன் புள்ளைகளும் சந்தோஷமா வாழலாம் இல்லேன்னா கஷ்டம்தான் தனியா இருக்க முடியாது பொம்பளைங்க ‘’
‘’ நீ சொல்றது நியாயம்தான் என்ன ஐடியா சொல்லு ’’
’’ஹி ஹி பொழச்சுக்குவே இப்படித்தான் இருக்கணும் நான் என்ன சொல்ல வரேன்னா நீயும் தனியாத்தான் இருக்கெ நானும் தனியாத்தானிருக்கேன் உன் புள்ளைகளை என் புள்ளைகளா பார்த்துக்கி்றேன் , பேசாம என் வீட்டிலே வந்து நீ இருந்துக்க..’’
அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் சீறினாள்
‘’அடப்பாவி ஒரு நண்பனோட மனைவி கிட்ட இப்படி பேசுறோமேன்னு
உனக்கு வெட்காமாயில்லே தூத்தெறி ..என்னா தைரியம் இருந்தா இப்படிபேசுவே நீ எழுந்திரு மருவாதையா இல்லே மருவாதை கெட்டுப்போய்டுவே விளக்கமத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேட்குதோ
இப்படி பேச உனக்கு அருவருப்பா இல்லே போ போயிடு ‘’
என் கைகளிலே வலு இருக்கு என் புள்ளைகளை காப்பாத்த எனக்குத்தெரியும் சிறகில்லா பறவைன்னா சிதச்சுடலாம்னு நினைக்கிறியோ ..அடிவாங்காம போய்ச்சேறு ‘’
‘’சிவகாமி நிறுத்து நான் குடிகாரன் தான் ஆனால் துரோகி இல்லேஉன் புருஷன் குடிக்க நானும்தான் காரணம் அவன் போனதிலேயிருந்துனான் செய்த தப்புக்கு பிராயச்சித்தமா உனக்கு உதவணும்கிற நல்ல எண்ணத்தொடுதான் இங்கே வந்தேன் நீ எல்லோரையும் போலத்தான் என்னையும் நினைச்சிட்டே நான் சம்பாதிக்கிற காசிலே நீ உன் புள்ளைகளை படிக்க வைக்கலாம்னுதான் வந்தேன்
நீ இந்த குடிசையிலே தனியா இருந்தா நல்லது இல்லேன்னுதான் என் ஓட்டு வீட்டிலே வந்து இருக்க சொன்னேன் எத்தனை நாள் உன்புருஷனோடு இங்கே வந்திருக்கேன் ஒரு நாளாவது உன்னை தப்பா
பார்த்திருப்பேனா என்னையப்போய் தப்பா நினைச்சுட்டியே
நானும், ஒரு நல்ல தாயிக்குப்பிறந்தவந்தான் .என் தங்கச்சியா இருந்து
யாருமில்லாத எனக்கு சோறு ஆக்கிப்போட்டுகிட்டு இருன்னு சொல்லத்தான் வந்தேன் எப்ப நீ என்னை தப்பா நினச்சுட்டியோ
அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் நான் இந்த ஊரைவிட்டே போயிடறேன் சிவகாமி நான் பேசியது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுடு ‘’ சொல்லிவிட்டு விடு விடுவென நடந்தான் சோகத்தோடு
சீச்சி நான் ஒரு அவசரகுடுக்கை இந்த நல்லவனைப்போய்…
வேண்டாம் போகட்டும் என்னதான் அவன் தங்கச்சியா நினைத்தாலும்
இந்த ஊரு உலகமும் தப்பாத்தானே பார்க்கும்….. மனசிலே வலு இருக்கு
கையிலே தெம்பிருக்கு என் புள்ளைகளை நான் காப்பாத்திடுவேன்
வைராக்கியத்தோடு குழந்தையை கட்டியிருந்த புடவையாலேயே துவட்டிகொண்டு குடிசைக்குள் நுழைந்தாள் சிவகாமி
சரஸ்வதிராசேந்திரன்

13-5-2017= நிலாச்சோறு==ஈற்றடி இருபது போட்டி


ஊ ..ல,,,ழ...ள ஏழு சுரங்கள் கவிதைப்போட்டி==14=5=2017


அமிர்தம் கவிதை குழுமம் =10-5-2017=முதலெழுத்து கவிதை’’ எ’’

நமது அமிர்தம் குழுமத்தில் கடந்த 10/05/17 மற்றும் 11/05/17 அன்று நடைபெற்ற 'படம் பார்த்து முதலெழுத்து கவிதைப் போட்டி'யில் சிறந்த முறையில் கவிதை எழுதி சான்றிதழ் பெறுகிறார் கவிதாயினி திருமதி. Saraswathi Rajendran அவர்கள்.
அமிர்தம் குழு சார்பாக இனிய வாழ்த்துக்கள்

3-5=2017 = நிலாச்சோறு==விடுகவிதை

வணக்கம் கவிஞர்களே
மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்
சுந்தரகவிராயர் எழுதிய இந்த கவிதை தான் விடுகவிதை
இங்கு காணப்படும் ஆயுதமும் தாக்கப்படும் மிருகமும் என்ன...?
மிருகம் வேங்கை ஆயுதம் வேல்
இதற்கு சரியான விடையை முதலில் கவிதை நடையில் சொல்லி
வெற்றியாளர்ஆகிறார் சரஸ்வதி ராசேந்திரன்
இன்றைய விடுகவிதை சற்று வித்தியாசமாக சங்க கால பாடல் ஒன்று அதில் மறைந்துள்ள மிருகத்தையும் அதைக்கொல்ல பயன்படுத்தும் ஆயுதத்தையும் இணைத்து கவிதை படைக்க வேண்டும்
இதுதான் அந்த பாடல்
#மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்
சுந்தரகவிராயர் எழுதிய இந்த கவிதை தான் விடுகவிதை
இங்கு காணப்படும் ஆயுதமும் தாக்கப்படும் மிருகமும் என்ன
வழக்கம் போல 30 வார்த்தைகளுக்கு குறையாமல் கவிதை படைத்து விகடகவியாகுங்கள்
நடுவர் பிருந்தாவனம் பிரியநிலா
ஆளுமையில் அரசன் அவன்
தோளிலே வேலை ஏந்தி
பரியின் மீதமர்ந்து பாய்ந்து சென்றான்
வேட்டையாட கண்டான் அங்கொரு
வேங்கைப்புலியை வேந்தனவன்
வேலை எடுத்து வீசினான் வேங்கை மீது
வேங்கையும் வீழ்ந்து மடிந்தது
வெற்றிப்பெருமிதத்துடன் அரண்மனை சென்றான்
வெற்றி வாகை சூடிய வேந்தனைக்கண்ட
அரண்மனைப்பெண்கள் அரசனுக்கு
ஆலத்தி எடுத்து அமோகமாய் வரவேற்றனர்
ஆயுதம்== –வேல்
மிருகம் ==வேங்கைப்புலி

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா== 12 -5=2017=புவியை மறந்த மேகங்கள்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 12/05/2017நடந்து முடிந்தபாரதிதாசன் கவிதை எழுதும்
போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்
கவிஞர் மதுரா அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
புவியை மறந்த மேகங்கள்
புவியை மேகம் மறந்ததால் எங்கும்
புல்கூட காய்ந்தே போனது நிலத்தில்
பூமி தனக்கு பூஜை போடவா சொன்னாள்
புகையால் அச்சுறுத்தாதே என்றுதானே சொல்கிறாள்
விருட்சங்களை வெட்டி சிதைத்தாயே
மேகத்தை வரவழைக்கமுடியுமா
நிலமகளைத் துளையிட்டு நீரை உறிஞ்சினாய் சிறு
நிலத்தைக்கூட விடாமல் கட்டிடங்களால் நிரப்பினாய்
உப்பிட்ட தெய்வத்தை நன்றி கொல்வோமானால்
எப்போதும் இல்லை நிலை வாழ்வு என்று கற்பிக்கவே
புவியை மேகங்கள் மறந்தன போலும்
உனக்குத் தகுமோ இச்செயல் மேகமே
உன்னிடமே நான் முறையிடுகிறேன்
வாழவிடாமல் பெய்து கெடுக்கின்றாய் சில நேரம்
வாழ்வாரை பெய்யாமலும் கெடுக்கின்றாய்
போதும் வறட்சி பொங்கி வா மழையே
கார்மேகமே கருணை செய் எங்கள் மனிதர்கள்
உணர்ந்து விட்டார்கள் தங்கள் பிழையை
சரஸ்வதிராசேந்திரன்

உயிர் கொண்ட ரோஜாவே-சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா-11-5-2017

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/05/2017நடந்து முடிந்தகாதல் கவிதை எழுதும்
போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்
கவிஞர் இதயம் விஜய்அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
உயிர் கொண்ட ரோஜாவே
மலர்களிலே தனியொரு கோலம் காட்டி
மங்கையரின் கூந்தலுக்கு அழகுக் கூட்டி
நின்றாடும் தோட்டத்திலே எழிலைக் காட்டி
நிறைவாக்க வாங்குவான் காதலிக்குக் காசை நீட்டி
உயிர் கொண்ட ரோஜாவே உனைச் சூடும் என்
உயிரான காதலிக்கு உறவான ரோஜாவே
ரோஜா மலரிங்கு செண்டாடுது இந்த
ராஜா மனம் அதைக் கண்டுப் பந்தாடுது
என் கண்ணில் ரோஜாவாக இருப்பவளே
என் நாவில் கவிதையாய் வாழ்பவளே
மங்கை நீ வாய் திறந்தால் ரோஜா வாசம்
மன்னவன் எந்தன் வாய் உன் பேரை உச்சரித்தே பேசும்
பெண்ணே உன்னாலே நான் வாழ்கிறேன்
கண்ணே உன் கண்ணாலே உலகைப் பார்க்கிறேன்
மண்ணில் நாம் பிறந்தது ஒன்றாக வாழத்தான்
கண்ணைப் போல் காதலை நாம் காப்போம் வா
சரஸ்வதிராசேந்திரன்