வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
வணக்கம் கவி உறவுகளே..
சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 29/03/2017 தின காதல் கவிதைப் போட்டியில் வேரறுந்து பூங்கொடிகள் என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: Ramadoss Gandhi
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது
வேதனைத் தீயினில்
வேரறுந்து பூங்கொடிகள்
வித்தகம் பேசி
விளையாடும் உலகில்
சித்தம் தெளியா
சிறுமிகள் சிறைபடுகிறார்கள் காதலில்
அவசியம் ஒன்றை
அவசரமாய்த் தேர்ந்தெடுத்து
குலைந்த காதலால்
கலைந்து போகிறார்கள்
கண்ணியமிக்க பெண்களே!
கொஞ்சும் மொழியால்காதல்பேசி
வஞ்சகமாய் நடித்து
நஞ்சை கலக்கிறார்கள் நயவஞ்சகர்கள்
நிசமானது என்றெண்ணி
நிழலாய் தொடர்கிறார்கள் வசமாய் ஏமாறுகிறார்கள்
மாசு படுத்திவிட்டு
தூசுபோல் ஒதுக்கி
வீசி எறிந்துவிடுகிறார்கள்
நேசிப்பதுபோல் நடித்தவர்கள்
வழி தவறி வாய் தவறி
வாழ்க்கைத் தவறி ஊராரின்
பழிச்சொல்லால் உய்ய
வழி தெரியாமல்
இடிந்த நிலையில்
இழந்த பொருளாய்
விடியாமல் போகிறது
:விபரீதமாகிறது வாழ்க்கை வேதனைத் தீயினில்
வேரறுந்து பூங்கொடிகளாய்
வெந்தணலில் வாடுகிறார்கள்
பெண்கள் பலர்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக