ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

பொன்மனம் --தினத்தந்தி --குடும்பமலர்--12-3-1995

அம்மாவின் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தான் ஈஸ்வரன் .
"ஜாதகம் பொருந்திருப்பதாக பெண் வீட்டவர்கள் சொல்கிறார்கள் .பெண்ணை பெற்றவர் அமெரிக்காவில் பெரிய வேலையில்இருக்கிறார் பெண் சென்னை கல்லூரியில் பி ஏ ,படித்தவள் .பாடத்தெரியும்
.பரத நாட்டியம் அரங்கேற்றம் கூட ஆகிவிட்டது .வீட்டு வேலைகள் கூட திறமையாக செய்வாளாம் .ஏகப்பட்ட சொத்துக்கள் வேறு மூத்த மாப்பிள்ளை பிரபலமான டாக்டர் .சென்னையில் வாரி கொட்டுகிரானாம் .பரம்பரை பணக்காரக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்து பெண்ணை பார்த்து விட்டு பீறகு .. பேசு .... .தாமதிக்காமல் உடனடியாக ,புறப்பட்டு வா ..."
அவனுள் உற்சாகம் பெருக்கெடுத்துகொண்டிருந்தது .அவன் எண்ணியபடியே அந்தஸ்து உள்ள குடும்பம் .கசக்கவா செய்யும் ? அந்தஸ்து மோகம் அவனுக்கு ஏற்பட காரணம் இருந்தது . பள்ளிக்கூட
நாட்களில் அவன் தோழர்கள் யாவரும் பெரிய இடத்து பிள்ளைகளாக இருந்தனர் .அவர்களது பேச்சுக்கள் ,கார் ,பங்களா ,வெளிநாட்டு பயணம் என்ற பெரிய அளவிலே எழும்போதெல்லாம் தூங்காமல்
தன ஏழ்மையை எண்ணி உள்ளூர புழுங்குவான் . அந்த புழுக்கம்தான் வைராக்கியமாக மாறி அயராது உழைத்து வயிறைஒடுக்கி ,வாயைக்கட்டி ,வளர்ந்து தன அந்தஸ்தை மேம்பட செய்துகொண்டான் .அடி மட்டத்திலிருந்து வந்தவன்தான் .ஆனாலும் அந்தஸ்து மிக்க இடத்தில்தான் பெண் எடுப்பேன் .அழகு ,படிப்பு ,அந்தஸ்த்தில் அவள் ஒரு பிரபலமானவரின் மகளாக இருப்பவைளைத்தான் திருமணம் முடிப்பேன் என்ற குறிக்கோளை கொண்டிருந்தான் . அதனால்தான் ஐ ந்து வருடங்களாக வந்த வரன்களைஎல்லாம்தட்டிக்கழித்துக்கொண்டிருந்தான் ..
இன்று அம்மா எழுதிய இந்த வரன் அவன் இஷ்டப்படி இருந்ததால்தான் உற்சாகம் கரைபுரண்டோடியது .தாமதிக்காமல் உடனே புறப்பட்டான் .ஹம்மிங்கில் பாடியவாறே காரோட்டி வந்துகொண்டிருந்தான் ..அவன் சிந்தனை வேகத்துக்கு ஈடு கொடுத்து கார் பறந்தது .ஊர் எல்லை வந்ததும் வேகத்தை அதிகபடுத்தினான் ஈஸ்வரன் .
அந்த நேரம் பார்த்தா ..அந்தப்பெண் அவசரமாக தெருவை கடக்கவேண்டும் ,கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணை தூக்கி எரிந்தது கார் .திடுக்கிட்டு போய்பிரேக்கை அழுத்தினான் .கும்பல் கூடிவிட்டது .ரத்தக்காயத்தில் கிழேகிடந்தாள்அந்தப்பெண் .ஒரு அனம் நிலை தடுமாறினாலும் ,மறுகணம் மற்றவர்களின் உதவியோடு வாரி காரில் போட்டுக்கொண்டு ஆஸ்பிடலை நோக்கி போனான் .
விவரம் அறிந்து பெண்னைப்பெற்றவர்கள் ஓடி வந்தனர் .
"அடப்பாவி ,பணமும் ,காசும் இருந்துட்டா இப்படியா கண்மண் தெரியாமல் கார் ஓட்டறது .என் பெண்ணோட எதிர்காலத்தையே சிதைச்சுட்டியே ,நல்லாஇருக்கிறப்பவே கல்யாணம் நடக்கிறது கஷ்டம் .இப்ப சிதைஞ்சு போயிட்ட முகத்தை பார்த்து யாரு இவளை கட்டிப்பா ,உன்னை தெய்வம்கூட மன்னிக்காது , உ ருப்பிடுவாயா ? "மங்களம் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.அவளை
அடக்கினார் வைத்தியநாதன் "இது ஆஸ்பிடல் கொஞ்சம் சும்மா இருக்கியா?நம்மவிதிக்கு ஏன் அவரை திட்டறே ? அடிச்சுபோட்டுட்டு ஓடாம,மனிதாபிமானத்தோடு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தாரே அதுவே பெரிய காரியம் ,.ரொம்ப நன்றி தம்பி "
"சார் என்னை நல்லாதிட்டடும் ,தவறு என் பேரிலேதான் என்னாலதான் உங்க மகளுக்கு இப்படியொரு ஆபத்து வந்தது பிளீஸ் ,என்னை ம ன்னி ச்சுக்குங்க சார் ,வைத்திய செலவை நானே
ஏற்றுகொள்கிறேன் "ஈஸ்வரன் கண்கலங்கினான் . ஈஸ்வரன் சொன்னபடி வைத்திய செலவை ஏற்றுக்கொண்டான் ,இருப்பினும் அவன் மனம் அமைதியடைய வில்லை .தினமும் ஒரு முறை
அவளை போய்பார்த்து ,டாக்டரிடமும் நன்கு கவனிக்கச்சொல்லிவிட்டு வந்தான் . இது அவன் அம்மாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது
"ஈஸ்வரா ,அவளோட விதிக்கு நீ என்ன செய்வே ?நீஏற்படுத்திய ஆபத்துக்கு ஈடாகத்தான் காசை கொட்டி வைத்தியமும் செஞ்சுட்டே பின் ஏன் அதையே நினைச்சு மறுகிகிட்டு,போப்பா ,
நான் சொன்ன பெண்ணை பார்க்க கிளம்பு .அவங்களும் எத்தனை நாள் பொறுப்பாங்க?வருகிற தையிலே கல்யாணத்தை முடிச்சிடலாம் "
அம்மா அவசரப்படாதே இன்னும் ஒரு வாரம் டயம் கொடு ,அதுவரை தொணதொணக்காதே "என்று கூறி விட்டு எழுந்து போனான் .அவன் விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவே இல்லை
அந்தப்பெண்ணின் தை கதறிய கதறல்தான் நினைவிலேயே நின்றது .அவள் சொன்னதுபோல் நன்றாக உள்ள பெண்களுக்கே திருமணம் நடப்பது கஷ்டம் அதுவும் கோரமான முகத்தை அடைந்து
விட்ட அவளை யார் திருமணம் செய்துகொள்வார்கள் ?அதுவும் ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணை ?மனசாட்சி உறுத்தியது .நிறைய யோசித்தான் நிறைய வருத்தப்பட்டான் .பின் ஒரு முடிவோடு
எழுந்தான் தன்னால் உருவான பிரச்னைக்கு தானே தெளிவு தர வேண்டும் என்ற முடிவோடு .
"அம்மா என்னாலேதானே உங்க பெண்ணுக்கு இந்த நிலைமை உங்க பெண்ணுக்கு நானே வாழ்க்கை தர முடிவு பண்ணிட்டேன் உங்களுக்கு சம்மதம்தானே ?
"தம்பி ,நீங்க அவசரப்பட்டு மூவு எடுக்காதீங்க ?"வைத்தியநாதன் படபடத்தார் .அதற்குள் அந்தப்பெண் குறுக்கிட்டாள். "அப்பா கட்டு பிரிக்காத இந்த நிலையிலே என் முகம் எப்படி இருக்கும்னு எனக்கே தெரியாது ,ஒரு வேளைமற்றவர்கள் பார்த்து அறுவெருக்கிறநிலையிலென் முகம் இருந்திட்டா .....யாரும் பிராயச்சித்தம் செயுறேன்னு உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டு பின்னாலே தானும் நிம்மதி இழந்துட்டு ,என் நிம்மதியையும் சீரழிக்கவேண்டாம் இதுவரை செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லி அனுப்புங்கப்பா "
"இல்லே லீலா ,முகத்தை பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லே .கட்டு பிரிச்சதும் நீ அழகா இருந்திட்டா இந்த அழகுக்காகத்தானே ஆசைபட்டேன்னு என் மனசாட்சி உறுத்தும் ,நேர் மாறா ஆயிட்டா
நான் அனுதாபத்தாலேதான் கல்யாணம் பண்ணிகிட்டதா உன் மனசாட்சி உறுத்தும் அதனாலே கட்டு பிரிக்காதைந்த நிலையிலேயே உன்னை நான் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு தருகிறேன் இப்படி செய்வதால் என்னை நீ தியாகியாக கருத வேண்டாம் .உன்னை கடைசிவரை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வேன் இது என்தைமேல் ஆணை "சொல்லிவிட்டு வெளி நடந்தான் .இப்போது
அவன் மனம் தெளிவுடனும் ,அமைதியுடனும் காணப்பட்டது
தினத்தந்தி குடும்பமலர் 12 --3--1995

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக